Saturday, March 27, 2010

பதிவர் சங்க விவாதம் அல்லது பின்நவீனத்துவ பயிற்சிப் பட்டறை அல்லது..... கொய்யால ஏதோ ஒன்னு!

முதலில் பதிவர் சந்திப்பைப்பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் ஸ் யப்பா முடியல............................

இன்றைய பதிவர் சந்திப்பிற்கு மாலை 6 .30 க்குப் போய்ச் சேர்ந்தேன். உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஒரு மொக்கை மேட்டர் டைப் செய்யப் பட்ட பேப்பரைத் தந்தார். அப்போதே நான் உஷாராகி இருக்க வேண்டும். அதன் பின் ஒன்லி மொக்கை மற்றும் மொக்கையோ மொக்கை.

கருத்துக்குத்துக்களை இறக்குவதாக நினைத்து மட்டையடிக்கருத்துக்கள் சராமரியாக இறக்கப் பட்டன. விதிவிலக்கு சுகுணா திவாகர் மற்றும் நர்சிம். ஆ'ரம்பம்' முதலே காமெடிப் படம் பார்க்கும் உணர்வு. ஆளாளுக்கு என்று ஒரு கூட்டம் இருப்பதும் எங்கு எதற்காகக் கூடினாலும் கூட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நிரூபித்துக் கொண்டும் இருந்தனர். உண்மைத்தமிழன் பேசும்போது யாராவது நாம் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். ம்ஹீம்........இல்லையே..... ஆனா அவரும் சாதாரணப் பட்ட ஆளு இல்ல... எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு. :) அநேகமா தானைத்தலைவரா அவரையே நியமிச்சுரலாம். அண்ணன் பைத்தியக்காரன் பேசிய பொது, எனக்கு இவர் தமிழ்ப்படம் போலக் கூட்டத்தைக் கலாய்க்கிறாரோ என்று நினைத்தால் உண்மையிலேயே மனுஷன் சீரியஸ்-ஆ பேசுறாரு. அந்த முன் அறிக்கையைப் படித்த எனக்கே இது ஆவாதுன்னு தெரிஞ்சு போச்சு. அண்ணே உங்களுக்குத் தெரியலையா? இல்ல உண்மையிலேயே கலாய்ச்சிங்களா? தனியாவாவது எனக்குச் சொல்லுங்க....... அப்புறம் சங்கம் சங்கம் என்று யாராவது சொல்லும் போதெல்லாம் எனக்குக் கைப்புள்ள வடிவேலும் அந்த இத்துப் போன வண்டியும் ஞாபகம் வந்து தொலைத்தது.
அப்புறம் ஞாநி........ வழக்கமாக அவர் சொல்லும் அறிவுரைகள், சட்டம், அனுபவங்கள்........ நான் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. மொத்த 1 .30 மணி நேரத்துல 1 மணிநேரம் பேசுனாரு. (அப்பிடித்தான் எனக்குத் தோன்றியது) அவரு சொன்ன விஷயம் எல்லாம் ஓகே. ஆனால் அபத்தமான ஒரு நாடகத்தில் இடம்பெறும் அறிவுரைக் கருத்துக்களைப் போல இருந்தது.
நான் என்ன கருத்துடன் சென்றேனோ அதே கருத்துக்களைச் சுகுணாவும் நர்சிமும் சொன்னார்கள். பிளாக் என்பது ஒரு கட்டற்ற பெருவெளி, அங்கே ஒரு சென்சாரைக் கொண்டுவருவதைப் போல பேசினார்கள் பலர். சார் என்னை இவன் கிள்ளீட்டான் சார்னு யாராவது சொன்னால் சங்கம் இறங்கிப் போராடி நடவடிக்கை எடுக்குமாம். இப்போதே யாராவது உங்களைப் பாதிக்கிற மாதிரி எழுதினால் அவர்களை முடக்க முடியும் எனும்போது கமிட்டி எதற்கு? தலைவர் எதற்கு?. யாருக்காவது உதவவேண்டும் என்றால் இப்போது செய்வதைப் போலவே ஒரு போஸ்ட் போடுங்கள். விரும்பியவர் தரட்டும்.இதில் சங்கம் என்ன செய்யப் போகிறது?. சங்கத்தின் பேரில் செய்வார்களாம்..... இப்போதும் வலைப்பதிவர் உதவி என்றுதானே சொல்லப்படுகிறது. எப்படியும் யாரையும் கட்டாயப்படுத்தி காசு/உதவி வாங்க முடியாது எனும் போது தலைவர் சங்கம் எல்லாம் என்ன செய்வதற்கு ?


அப்புறம் அரசாங்கத்தை எப்படி சந்திப்பது... :) இவர்கள் ஒருமுறை யாரையாவது சந்தித்தால் தெரியும் அந்தக் காமெடி.
ஒரு முறை தலைவராய் இருந்தவர் அடுத்த முறை பிளாக் உலகிலேயே இருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரண்டு வருடத்திற்கு முன் தீவிரமாக வலையுலகில் செயல்பட்டவர்கள் இப்போது இல்லை.இப்போது இருப்பவர்கள்? வலையுலகம் அதிகாரத்தை பரவலாக்கி இருக்கிறது. அதை மீண்டும் ஏன் சங்கத்தலைவர், செயற்குழு என்று ஓரிடத்தில் குவிக்க வேண்டும்?

ஒரு அமைப்பை விர்ச்சுவல் உலகில் தொடங்கி அதை ஒரு பகிரும் இடமாகப் பயன்படுத்துவதுதான் இந்நிலையில் சரியானதாக இருக்கும். இது நிச்சயம் வெற்றி பெறும்.. அதற்கு சிறுகதைப் பட்டறை, சிறுகதைப் போட்டி,சிங்கை நாதனுக்கு உதவியது, போலி விசயத்தில் உறுதியாய் இறுதிவரை நின்ற அண்ணன் உண்மைத்தமிழன் என்று பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு பொதுவான ப்ளாகில் எல்லாருடைய ப்ளாக், எழுதுபவரின் விருப்பம், வேலை - அவரால் அவரது பணி சார்ந்து உதவ முடியுமா? (உதா:- ப்ருனோ, செந்தழல் ரவி), பணி சாராத வேறு உதவிகள் செய்ய இயலுமா ( உதா:- நர்சிம், பைத்தியக்காரன்), அதற்கான நேரம், தொடர்பு எண், ஈமெயில்.... வலையுலக சந்தேகங்கள் (டெக்னிகல் பிரச்சனைகள்) தொடர்பான உதவிகள் செய்பவர்கள் போன்ற விபரங்களையும் , ஒரு பிரச்சனையின் தீர்வை பொதுவான அந்த பிளாக்-இல் பகிர்தல் என எவ்வளவோ செய்ய முடியும்.

இதைத்தாண்டி ஒரு நிறுவனஅமைப்பாக இதைத் தொடங்கினால் இன்றைய மொக்கைக் கூட்டம் போல ஒரு மொக்கை அமைப்பாக மாறும் சாத்தியங்கள்தான் அதிகம்.

இந்தக் கூட்டத்தினால் எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் :
டீயே குடிக்காத நான் இன்று டீ குடித்தேன் அது நன்றாக வேறு இருந்தது.
இப்படி ஒரு புத்தகக்கடை இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
இனிமேல் மான்கராத்தே செய்வதற்கு ஏதுவாக கதவின் அருகே இடம்பிடிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். (பல சீனியர்கள் மான்கராத்தெயில் ப்ளாக் பெல்ட் வாங்கி இருப்பதையும் இன்றுதான் பார்த்தேன் - இப்படி எத்தனை கூட்டத்த நாங்க பார்த்திருப்போம் - ஒரு மான் மாஸ்டர் ) :)
நிறைய ப்ளாக்கர்கள் கதைசொல்லிகளாக இருப்பதும் தெரிய

வந்தது.
எல்லாவற்றையும் விட இந்தப் பதிவை இரவு 12 .30 க்கு டைப் செய்வது.....

மற்றும்

கூட்டம் என்றால் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என்ற நவீனத்துவக் கூற்றைக் கட்டுடைத்து பின்நவீனத்துவ ரீதியில் ஒரு கூட்டத்தை நடத்துவது எப்படி என்று ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியவர்களுக்கு என் நன்றி நன்றி நன்றி நன்றி.


18 comments:

  1. தலைவரே.. இணைய எழுத்தாளர் என்பதை மாற்றி தமிழ் வலைபதிவர்கள் குழுமம் என்று முடிவெடுத்துதான் கூட்டம் முடிந்தது..

    அப்புறம் தலைவரே வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடவும்..

    ReplyDelete
  2. ஆதங்கம் புரிகிறது. மாற்றம் வரும். அமைப்பு , பாதிக்கப் பட்டதாக உணர்பவர்களுக்கு உதவுவதாக அமையட்டுமே.

    ReplyDelete
  3. அண்ணே வேர்ட் வெரிபிகேஷனை எடுத்தாச்சு........

    //தலைவரே.. இணைய எழுத்தாளர் என்பதை மாற்றி தமிழ் வலைபதிவர்கள் குழுமம் என்று முடிவெடுத்துதான் கூட்டம் முடிந்தது.. //

    கட்டுடைத்தலைக் கட்டுடைத்த அண்ணன் கேபிள் வாழ்க!
    :)

    ReplyDelete
  4. intha kooththu enge natanthathu?

    ReplyDelete
  5. படித்தேன் என்பதற்காக....

    ReplyDelete
  6. But it is written in most of the posts, that only 2 (Adisha & Ravishankar) bloggers/readers opposed the concept of forming group/forum.

    Why did not register your views in that meeting.

    ReplyDelete
  7. தமிழ் வலைபதிவர்கள் குழுமம் தல போஸ்ட் தந்தால் வரமாடீர்களா சரவணன்-சாரதி

    ReplyDelete
  8. நல்லவேளை நான் பேசலை :))

    ReplyDelete
  9. @Madurai Saravanan
    மாற்றம் வரவேண்டும் என்பதுதான் என் ஆசையும்.
    ஆனால் எப்படிப்பட்ட மாற்றத்தை இவர்கள் தருவார்கள் அது கேள்விகுறிதான்........

    @ ttpian
    காந்தி போன சனிக்கிழமை செத்துட்டார் தல.

    @ மணிஜீ
    தண்டோரா ...... இது நீங்கள் போட்ட பின்னூட்டத்தை நான் படித்தேன் என்பதற்காக..................

    @ ராம்ஜி_யாஹூ
    அங்கே அதற்கான சூழ்நிலையே இல்லை. என்னை யாரும் கேட்காத போது, மைக்-ஐ பிடுங்கி உரை ஆத்துவது எனக்கு எப்போதுமே பிடிக்காது.
    இந்த விஷயத்தையே ப்ளாக் இல் சொல்லமுடியும் போது எதற்கு அங்கே பேச வேண்டும். என்னைக் கேட்டால் அந்த சந்திப்பே தேவை இல்லை. இங்கே விவாதித்து இங்கேயே முடிவு செய்திருக்கலாம். அதில் உலகம் முழுக்க உள்ள தமிழ் ப்ளாக்கர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருப்பார்கள், இப்போது நடந்ததைப் போல சென்னைவாழ் பதிவர்கள் மட்டும் கருத்து சொல்லும் (அதுவும் நடக்கவில்லை... அது வேற விஷயம்) காமெடி நடந்திருக்காது. இதைப்போலவே எல்லா விஷயங்களையும் விர்சுவல் உலகிலேயே பேசிக்கொள்ளலாம். எப்போதாவது ஒன்றாக சந்திக்கலாம்.... அதுவும் நட்பிற்காக..... குழுவை (forum) ப்ளாகில் ஏற்படுத்தலாம்.. விவாதிக்கலாம் ... உதவலாம்...... பகிரலாம்.......... உதவிகளைப் பெறலாம்...... கூட்டம் சேர்ப்பதும் மாஸ் காட்டுவதும் சிலருக்கு அதிகாரத்தை தருமே அன்றி வேறு எந்த நல்ல பலனையும் அளிக்காது.

    ReplyDelete
  10. @ மணி (ஆயிரத்தில் ஒருவன்)
    தம்பி டீ சொல்லீருந்தேன் இன்னும் வரல

    @ யெஸ்.பாலபாரதி

    :P

    @ நர்சிம்
    :P

    @ எம்.எம்.அப்துல்லா

    ஒன்னும் பிரச்சனை இல்லண்ணே....

    அடுத்த கூட்டத்தில் அண்ணன் அப்துல்லா உரை ஆத்துவார்.கலாய்ப்பவர்களுக்கு அண்ணன் சரக்கு வாங்கித் தருவார்.
    - இப்படிக்கு அண்ணன் அப்துல்லா கொலைவெறிப் பேரவை
    அப்பிடின்னு போட்டுட்டாப் போச்சு.
    :P

    ReplyDelete
  11. நல்லா சொல்லிருக்கீங்க நான் சொல்ல நினைச்சதும் இதான். கலக்கல் பாஸ்.

    ReplyDelete
  12. சென்னையில் ஆரம்பிச்சா தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்...அப்போ வேற ஊர்ல ஆரம்பிச்சா தெலுங்கர் வலைப்பதிவர் குழுமமா?
    என்னய்யா இது சென்னையை தாண்டி யோசிக்கவே மாட்டாங்களா..?
    நீங்க சொன்ன மாதிரி வலைபதிவு மூலமாக கூட எல்லோர்க்கும் பொதுவான விதிமுறைகள் வகுத்து பொதுவான வலைப்பதிவர் குழுமம் ஆரம்பித்திருக்கலாம்..
    வழக்கம் போலவே சென்னையில் இருப்பவர்களுக்கு இருக்கும் கொம்பு வேறு எவருக்கும் இருக்காது என்ற நினைப்பும் அதை தடுத்திருக்கலாம்....

    ReplyDelete
  13. சரவணன் - நான் இதுவரை படித்ததிலேயே சங்கம் அமைப்பதற்கு எதிரான ஆணித்தரமான, நேர்மையான எதிர்வினை -- பாலபாரதி மற்றும் உங்களுடையது தான்..

    ReplyDelete
  14. //@ ராம்ஜி_யாஹூ
    அங்கே அதற்கான சூழ்நிலையே இல்லை. என்னை யாரும் கேட்காத போது, மைக்-ஐ பிடுங்கி உரை ஆத்துவது எனக்கு எப்போதுமே பிடிக்காது.
    இந்த விஷயத்தையே ப்ளாக் இல் சொல்லமுடியும் போது எதற்கு அங்கே பேச வேண்டும்.//

    என்னா கொடும சரவணன்!!!அவத்திக்கா பேசுங்க பேசுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தனா இல்லையா?
    கொஞ்சம் டைம் வேணும் பாஸ். Day one லயே எல்லாம் நடந்திருமா? நன்றி

    ReplyDelete
  15. @ நன்றி அதிஷா.

    @ கும்க்கி
    //பொதுவான வலைப்பதிவர் குழுமம் ஆரம்பித்திருக்கலாம்//
    அதுதான் ஏன் நிலைப்பாடும் கூட.

    @ நன்றி மாயன்.

    @ மயில்ராவணன்
    //அவத்திக்கா பேசுங்க பேசுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தனா இல்லையா?//

    அது நீங்கதானா :)அன்னைக்கு பேரைக்கேட்க மறந்துட்டேன்.

    //கொஞ்சம் டைம் வேணும் பாஸ். Day one லயே எல்லாம் நடந்திருமா?//

    நானும் அதேதான் சொல்றேன். சங்கம் தொடங்க எதுக்கு இவ்வளவு அவசரம். இவ்வளவு பிரச்சனைக்கிடையே சங்கம் தொடங்குவது தொடர்பான அறிவிப்புகள் வேறு வந்துவிட்டன.....

    ReplyDelete