Thursday, February 25, 2010

வரலாறு

என் கடிகாரத்தின் நேரம்
யாரோ ஒருவனின்
கடிகாரத்தில் நகர்கிறது

சிவந்த மனிதர்கள்
அவர்களுக்காக
அவர்களே
வரலாற்றை எழுதுகிறார்கள்

கறுப்பான எங்களில்
மிகக்கறுப்பானவனின்
ரத்தம்
மையாய் ஒழுகிச்செல்கிறது
அவர்களின்
வரலாற்றுப் பக்கங்களில்.

3 comments:

  1. நாளுக்கு நாள் உங்கள் கவிதைகளில்
    வார்த்தைகளின் வலு கூடி கொண்டே போகிறது..
    வாழ்த்துக்கள்..
    --சர்ச்சில்

    ReplyDelete
  2. Nice one da. Hope ur enjoying ur life.

    -Allwin (RCET)

    ReplyDelete