Sunday, February 21, 2010

புணரும் காலம்

புணரும் காலம்

காமம் எரியும் ஒரு பகலின் ஒளியில்
சரியும் எல்லாம் நிமிரும் என்றாய்
என் முலை பார்த்து

இல்லை என்றேன் ஏளனத்துடன்
உன் குறி பார்த்து....

ஒளியற்ற எனதிரவில்
நீர்புசிக்கும்
உயிர் உறுப்பு
எப்போதேனும் எனது
எச்சில் நீ ருசிப்பாய்
என்றே காத்திருக்கும்
காந்தள் உதடு ......

நடுங்கும் கரங்கள்-
பதுங்கிய புலியாய்க் காமம்
நிலையற்று அலைகிறது சொல் தன துணைதேடி
இறுதியில் இருப்பதென்னவோ
இறுதியின் இறுதியும்
இருத்தலின் மரணமும்.

10 comments:

  1. ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த கவிதை

    ReplyDelete
  2. ரொம்ப பிடிச்சிருக்கு சரவணன்-சாரதி.

    ReplyDelete
  3. நன்றி கென்
    நன்றி பா.ராஜாராம்......

    மீண்டும் வந்து தங்கள் விமர்சங்களைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. கண்ணதாசன் கூட கவிதை எழுத உங்களிடம்
    பிச்சைவாங்க வேண்டும் போல் இருக்கு.
    ம.பரணீதரன்.

    ReplyDelete
  5. உங்கள் கவிதை ஒன்றை என் தளத்திற்கு,"என்னை கவர்ந்த வரிகளுக்காக"எடுத்துட்டு போறேன் மக்கா.நன்றி!

    ReplyDelete
  6. கவிதையின் வரிகள் அருமை!

    ReplyDelete
  7. நன்றி பா.ராஜாராம் அண்ணே....... தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்.....
    நன்றி தேவன் மாயம்
    நன்றி Feroz

    ReplyDelete
  8. நன்றி ம.பரணீதரன்....

    ReplyDelete
  9. ”இறுதியில் இருப்பதென்னவோ
    இறுதியின் இறுதியும்
    இருத்தலின் மரணமும்”

    ரொம்ப அருமை சரவணன் சாரதி

    நன்றி
    ஜேகே

    ReplyDelete