Monday, February 22, 2010

ஊண் வழியும் வார்த்தைகள்

ஊண் வழியும் வார்த்தைகள்

கனவில் புணரும் சிலருக்காக
கனவைப் புணருகிறேன் நான்
வெள்ளைக் கருப்பில் விளைந்தன
விதைகள்
சிதைந்த விதைகளில் முளைக்கிறது மரணம்.

எந்த ஒரு சொல்லின் முடிவிலும்
எட்டிப்பார்க்கிறது வாழ்வின் அபத்தம்..
வரிகளின் முடிவில் ஒழிந்திருக்கிறது
அதன் ஆயுதம்.......
கவிதையின் முற்றுப்புள்ளியில்
ஆரம்பமாகிறது ஒவ்வொருவரின் வக்கிரம்..

மிச்சமிருப்பதோ
ஒழுங்கற்ற நினைவுகளும்
ரத்தம் சொட்டும் வார்த்தைகளும்............

2 comments:

  1. மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்!!

    ReplyDelete
  2. நன்றி தேவன் மாயம்...

    ReplyDelete