Monday, July 10, 2017

இலை உதிர்தல் - 1




இலையடி நுணல்
சொட்டும் ஒருதுளி
பெருமழை



நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - நாம் 'இப்போது' என்ன செய்ய வேண்டுமோ அதை முழுமூச்சாகச் செய்வது. 
ஏனென்றால் அதை மட்டும்தான் நம்மால் செய்ய முடியும்.



சுயம் கொண்ட மனிதனுக்குக் கொடுக்கப்படும் பெரிய தண்டனை -
சராசரிகளைச் சகித்துக்கொள்வது. 
சுயவதைக்காரர்கள் மட்டும்தான் சராசரிகளைச் சகித்துக்கொள்ள முடியும்.


மழை யானை
பெய்யும் சாரல்
நனைகையில்,
அப்படித்தான் ருசிக்க வாய்க்கும்
துளித்துளியாய்.
மூளைக்குள் பாய்கையில்
புசியுமாம் கொஞ்சம் மனதிற்கும்.

என்(னுடன்) வாழ்தல்
மூச்சுத்திணறுகிறதா?
உங்களால் தாங்க முடியவில்லையா?
விரைவாக விலகி ஓடுங்கள்.
உங்களை அழுத்துவது
என் அகங்காரமல்ல,
பேரன்பின் கனம்.

வறண்ட நிலத்தில் தவிக்கும் தேரை மேல் விழும் ஈர மணல் போல், 
என் மேல் சரிகிறது இந்த இசை.

“Glorification – Romanticism – Sentimentalism” இவைதான் மனிதனின் சிந்தனையைப் பாதிக்கும் பிரச்சனைகளின் ஆரம்பப்புள்ளிகளாக இருக்கின்றன. தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இவற்றை அளவே இல்லாமல் புனிதப்படுத்தி உண்மையில் இலக்கியம் என்றால் எப்படி இருக்கும் என்பதே தெரியாத அளவிற்குச் சூழலை மாசுபடுத்தி இருக்கின்றனர். உண்மையில் இந்த மூன்று விஷயங்களும் எப்படி ஒரு மனிதனின் வாழ்வைப் பாழ்படுத்தி அழிக்கக் கூடியவை என்று எழுதினால் அது ஒரு சிறப்பான இலக்கியப் படைப்பாக இருக்கும்.


No comments:

Post a Comment