குல்தீப் நய்யார் எழுதிய "ஸ்கூப்" புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகம் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து, பாகிஸ்தான் பிரிவினை, சுதந்திரம், காந்தியின் மரணம், நேருவின் ஆட்சி - மரணம், லால் பகதூர் சாஸ்த்ரி ஆட்சி - மரணம், இந்திரா - காமராஜ் மோதல், எமர்ஜென்சி, பாகிஸ்தான் அணு ஆயுத உற்பத்தி, புலிகள் மீதான இந்திய அரசின் பார்வை, வாஜ்பாய் ஆட்சி வரை துண்டு துண்டாக விவரிக்கிறது. இதில் பெரும்பாலும் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏதும் இல்லை. அதே போல பொது மக்களுக்குத் தெரியாத விசயங்களை எண்ணிவிடலாம்.
அவரவருக்கு தெரிந்த ஆனால் சொல்லப்படாத விசயங்களை, வரலாற்றை வயதான பிறகாவது சொல்லலாம். ஆனால் இங்கே குல்தீப் நய்யார் சொல்லி இருப்பது எதுவும் அப்படிப் பட்டவை அல்ல. இதில் இருக்கும் நிகழ்வுகளால் யாருக்கும் பலனில்லை.
உதாரணமாக சாஸ்த்ரியின் மரணம், சுற்றி வளைத்து அவர் இயற்கையாகவே மறைந்தார் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் எங்களுக்குத் தெரியுமே. அதில் புதுசாக ஏதேனும் சொல்ல நினைத்தால் சொல்லி இருக்கலாம். இல்லாவிட்டால் அந்த சம்பவத்தை ஒற்றை வரியில் சொல்லிவிட்டுச் செல்லலாம். பத்துப் பக்கம் அதே அரசாங்கம் சொன்ன ரிப்போர்ட் -ஐச் சொல்வதில் என்ன ஸ்கூப் என்று எனக்குப் புரியவே இல்லை. இது மாதிரி பல விஷயங்கள் உள்ள புத்தகம் இது.
ஒன்று மட்டும் உறுதி - இது உண்மையான வரலாறும் இல்லை - ஸ்கூப்பும் இல்லை.
No comments:
Post a Comment